இந்த தனிமை இரவுகள் எனக்கானவை இல்லை. இவற்றில் எனக்கான விரல் கோர்த்தல், மெது மெதுப்பு, தத்துவ எழுச்சி, வழு வழுப்பு, ஊர் கதை, அந்தரங்க ஈரம், உனது தான் எனும் மறு உறுதி, காது வெடிக்கும் முத்தம், இது எதுவும் இல்லை. இந்த மது மட்டும் தான் இருக்கிறது தேவதைகளின் குரூர சாபம் போல்.