எனக்கும், கவிதைக்கும் எப்போதும் உன் தேடல் ! கவிதை கிடக்கட்டும் ! இப்படியே பிரிந்து இருந்தால் சத்தியமாய் பித்தனாவேன். ஆதலினால் அறிந்தும் அறியாமலும் கொஞ்சம் என்னை நினை நான் தெரிந்து கொள்ள சற்று மௌனம் கலை. ஆசையை புரிய வைக்க கொஞ்சம் நாணம் கொல் புரியாத போது என்னை அணைத்துக் கொல். வெட்கத்தை வெட்க விடு, உன் ஆடையால் அதன் விழிகளை மூடி ஓட விடு மல்லு கட்டு, மார்போடு ஒட்டு, கொடி போல் படர், இடைவெளி இடர் மோகத்தால் கடி, மிச்ச உயிர் குடி மூர்க்கம் தனி, முக்தி தினி. இதெல்லாம் இல்லை என்றாலும் பரவா இல்லை ஈவிரக்கம் இருக்குமன்றோ ? ஈர முத்தமாவது இரண்டு அனுப்பு இப்போதைக்கு !