நான் ஒரு graphite பென்சில்கள் காலத்து அமெச்சூர் ஓவியன். "அமெச்சூர்" என்பது கூட ஓரளவு சுய தம்பட்டமாகத்தான் தெரிகிறது. தந்தை ஒரு தொழில் முறை ஓவியராக இருந்தும், (அவராலேயே) தடி கொண்டு தொழில்நுட்ப புரட்சிக்குள் விரட்டிவிடப்பட்ட ஒரு ஆடு. அழுத்தத்தில் இருந்து விடுபடவும், முக்கியமாக Facebook தற்பெருமைக்காக மட்டுமே எப்போதாவது கிறுக்குவது என் ஓவிய சாதனைகள். இந்த முறை கற்காலத்தை ஒதுக்கி விட்டு சமகால கருவிகளை (iPad-Pro, Apple Pencil மற்றும் Adobe-Sketch செயலி) வைத்து எடுத்த முயற்சி இது. சொந்த கற்பனை இல்லை, வழக்கம் போல ஈ அடிச்சான் copy தான். ஆனால் என்ன ஒரு மகத்தான அனுபவம்... ஒரு 12 இன்ச் சதுரத்துக்குள் இவ்வளவு வசதிகள் சாத்தியம் என்று சொன்னால் 10 வருடத்துக்கு முந்திய ஓவியர்களால் சத்தியமாக நம்ப முடியாது. http://www.adobe.com/sea/products/sketch.html கலையும், தொழில்நுட்பமும் பெரும் கலவி கொள்ளும் மெய்நிகர் புரட்சி. என் தந்தை ஒரு பெரிய அறை முழுக்க சாதனங்கள் வைத்து இருப்பார். நின்று வரைய உதவும் முக்கோண (easel) ஸ்டாண்ட் முதல், எண்ணற்ற தூரிகைகள், மை கலக்கும் தட்டுகள், பல்வே...